மனித உடலில் 60% தண்ணீர் உள்ளது. மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் போதாது. ஏனெனில் நாம் வெளியே வேலைக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்வதால், 8 டம்ளர் தண்ணீர் என்பது குறைவு தான். ஆகவே குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
தண்ணீர் தான் உயிரின் ஆதாரமாகக் கருதப்படுகிறது. போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்ன கேடு ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
நீர் ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ளாவிட்டால் ஏற்படும் முதல் பாதிப்பு செறிமானக் கோளாறு.
வறண்ட சருமம் ஏற்படும். உடலில் தேவையான தண்ணீர் இல்லாதபோது ஏற்படும் விளைவுகளில் முதலில் வெளிப்படையாகத் தெரிவது தோல் பாதிப்புகள்.
அடிக்கடி பசி எடுப்பது வழக்கமாகிவிடும். உடல் சோர்வும் உண்டாகும்.
உடல் நிலையில் மட்டுமின்றி மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சாதாரண விஷயங்களைக் குழப்பிக்கொள்வது, பரபரப்படைவது போன்ற மாற்றங்களை விளைவிக்கும்.
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
உடலில் தண்ணீர் தான் அனைத்து பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களை சுமந்து செல்வதோடு, கழிவுகளை வெளியேற்றும்.
உடலின் வெப்பத்தை சீராக வைப்பதற்கு, தினமும் போதிய அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும்.
உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.
தசைப்பிடிப்புகளை தடுக்கும்
முறையான குடலியக்கம்
நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அப்போது அதிகப்படியான தண்ணீர் குடித்தால், அவை சரியாகிவிடும். ஏனெனில் தண்ணீர் குடலியக்கத்தை சீராக வைக்கும்.
பொலிவான சருமம் முகத்தில்
முகப்பருக்கள், பிம்பிள் போன்றவை அதிகப்படியான அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணமாகத் தான் ஏற்படுகிறது. எனவே இத்தகைய அழுக்குகளை வெளியேற்றுவதற்கும், பருக்கள் வராமல் இருக்கவும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
அசிடிட்டியை குறைக்கும்
பொதுவாக வயிறானது உணவுகளை செரிப்பதற்கு நொதியை சுரக்கும். அது மிகவும் சக்தி அமிலத்தன்மை நிறைந்தது. எனவே அதன் அமிலத்தன்மையை குறைப்பதற்கு, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்றை அரிக்க ஆரம்பித்துவிடும்.
மூளை செயல்பாடுகள்
மூளையில் 90 சதவீத தண்ணீர் உள்ளது. ஆனால் போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தலைவலி, சோர்வு போன்றவை அதிகம் ஏற்படும். அதிலும் 24 மணிநேரத்திற்கு மேலாக உடல் வறட்சி இருந்தால், இது மிகவும் மோசமான நிலையை உண்டாக்கிவிடும்.
மூட்டு உராய்வைத் தடுக்கும்
உடலிலேயே மூட்டுகள் மிகவும் முக்கியமான ஒன்று. எப்படி இயந்திரங்களில் இணைப்புகள் உள்ளதோ, அதேப் போல் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் இணைப்பது மூட்டுகள் தான். இத்தகைய மூட்டுகளில் ஏற்படும் உராய்வைத் தடுப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், மூட்டு வலிகள் ஏற்பட ஆரம்பிக்கும்.
ஊட்டச்சத்துக்களை கொடுப்பதற்கு
உடலில் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்வது தண்ணீர் மற்றும் இரத்த அணுக்கள் தான். ஆகவே தண்ணீர் குறைவாக இருந்தால், உடலின் பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
எடை குறைப்பதற்கு
தண்ணீர் வயிற்றை நிரப்புவதோடு, மெட்டபாலிசத்தின் அளவையும் அதிகரிப்பதால், அது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.
Tags: Water benefits, thaneer