சீரான மாதவிடாய் சுழற்சி

பெண்ணின் கர்ப்பபையில் நன்கு வளர்ந்த கருமுட்டை ஆணின் உயிரணுவுக்காகக் காத்திருக்கும், ஆணின் உயிரணு வந்து தன்னை அடையாத பொழுது அந்த கரு முட்டை உடைந்து ரத்த போக்காக வெளியேறும். இதையே நாம் மாதவிடாய் என்கிறோம். 28 நாட்களுக்கு ஒரு முறை வருவதே சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும். சிலருக்கு 30 நாட்களுக்குள் வருவதும் இயல்பே.

இரண்டு மாதங்கள் மற்றும் அதற்கு மேலே மாதவிடாய் வராமல் இருப்பது சீரற்ற சுழற்சியை குறிக்கும். இதில் 3 முதல் 5 நாட்கள் இரத்த போக்கு இருப்பது இயல்பான சுழற்சி.மாதவிடாய் ஏற்படும் முதல் நாள் கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறும்.சராசரியாக மாதவிடாய் நாட்களில் வெளியேறும் இரத்தத்தில் 25% முதல் 40% வரையில் மட்டுமே இரத்தம் முதல் நாளில் வெளியேறும்.இரண்டாம் நாள் 80% இரத்தம் வெளியேறும்.பின்பு மூன்று மற்றும் அதன் பின் வரும் நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும்.

இரண்டாம் நாளில் இருந்து வெளியேறும் இரத்தம் ரத்த சிவப்பிலே இருக்கும்.இதுவே சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும்.சிலருக்கு 2 நாட்கள் மட்டுமே மாதவிடாய் வருவதும் உண்டு,இது இயல்புக்கு மாறுபட்டாலும் சில மருத்துவர்கள் இதை நல்ல மாதவிடாய் சுழற்சி என ஏற்று கொள்கிறார்கள்.விந்துக்கு காத்திருக்கும் முட்டை விந்து வந்தடையாத பொழுது உடைந்து வெளியேறிவிட வேண்டும் ,இதுவே பெரும்பாலான மருத்துவர்களின் கருத்து.அப்படி வெளியேற கால தாமதம் ஆகும் பெண்ணிற்கு மாதவிடாய் கோளாறு இருப்பதாய் அறியலாம்.

ஏன் இந்த மாதவிடாய் கோளாறு வருகிறது?
~ 🌴🌷 ~
தூக்கமின்மையே இதற்கு முதல் காரணமாகும்.சராசரியாக 6 முதல் 8 மணிநேரம் ஒரு மனிதனுக்கு தூக்கம் தேவை படுகிறது என ஆய்வு கூறுகிறது.செல்போன்,இணையதளத்தின் ஆதிக்கத்திற்கு பின்பு பெரும்பாலான இளைங்கர்களுக்கு சரியான தூக்கம் இருப்பதில்லை.இதனால் இரவில் சுரக்கும் ஹார்மோன்கள் சரியாக சுரபதில்லை.இதுவே மாதவிடாய் கோளாறு ஏற்பட முதல் காரணம்.
மன அழுத்தம் எனும் பெரிய ராட்சசன் இன்றைய தலைமுறையினரை ஆட்டி படைக்கிறது என கூறும் அளவிற்கு இளைஞர்கள்கள் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனது இன்றைய அளவில் மிகவும் குறைந்து வருகிறது.முதல் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையின் லட்சியமாக வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் நிஜங்களையும்,ஏமாற்றங்களையும் தாங்கி கொள்ளும் மனது இருப்பதில்லை.

இதுவே மன அழுத்தம் உருவாக காரணமாக இருக்கிறது.சிறு சிறு ஏமாற்றங்கள் கூட இவர்களுக்கு ஏமாற்றங்களை தந்து பெரிய அளவில் மன அழுத்தத்தில் கொண்டு போய்விடுகிறது.
மாறும் உணவு முறைகள்.”உணவே மருந்து,மருந்தே உணவு”என்றைய நம் தமிழ் உணவுமுறை மாறி, இன்று மருந்து மட்டுமே உணவாகிவிட்டது.முன்பு நாம் உண்ணும் உணவிலேயே மருந்தும் கலந்து இருந்தது.பல நாட்டு மக்கள் இன்றும் நம் தமிழரின் உணவுமுறையை கண்டு வியந்து கொண்டு இருக்கின்றனர்.இதற்கு காரணம் நம் உணவிலே நாம் எடுத்து கொள்ளும் மருந்து பொருட்கள்.அன்றாடம் நாம் எடுத்து கொள்ளும் ரசம் கூட வெளிநாட்டவர்களுக்கு அதிசயமே,அதற்கு காரணம் ரசதினில் உள்ள மருந்து தன்மையே.இது போன்ற சிறு உணவில் கூட நம் முன்னோர்கள் வெகு கவனமாய் இருந்தார்கள்.இன்று துரித உணவின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறது.ஊட்டசத்து ஊசி போட்டு வளர்க்கப்படும் கோழிகளை உண்ணும் குழந்தைகள் விரைவிலேயே வயதுக்கு வந்துவிடுகின்றனர்.இந்த ஹார்மோன் மாற்றங்கள் நாம் உண்ணும் உணவினால் இயல்பாகவே நடந்து விடுகின்றது.

அதிக உடல் எடையும் முக்கியமான காரணியாக திகழ்கிறது.இந்த அதிகமான உடல் எடை தைராய்டின் காரணமாக கூட இருக்கலாம்.இந்த நோயை குணப்படுத்த உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.உடற்பயிற்சியின் மூலமாகவும் இந்த குறையை சரி செய்யலாம்.

மாதவிடாய் கோளாறுகள் போக்க மகத்தான வைத்தியங்கள் :🌴🌷

அருமருந்து.மருத்துவம் நிறைந்த இலைகளில் வேப்பிலை முதன்மை வாய்ந்தது .வேப்பிலை சாறு தொடர்ந்து அருந்துவதன் மூலம் வயிற்று கசடு நீங்கி சீரான மாதவிடாய் வர செய்யும்.

மாதவிடாய் கோளாறின் முக்கிய காரணம் இரத்தமின்மை.பீட்ரூட் உடம்பில் ரத்தம் ஊற செய்யும்.இதன் சாற்றை தினம் அருந்துவதன் மூலம் உடலில் ரத்தம் அதிகரிக்கும்.

பப்பாளியை சிறு துண்டுகளாகவோ அல்லது சாறு எடுத்தோ அருந்துவது மாதவிடாய்க்கு நல்ல மருந்து.பப்பாளி வாங்கும் பொழுது நாட்டு பப்பாளியா என்பதை நன்கு கவனித்து வாங்கவும்.அதிலும் விதை நிறைந்த நாட்டு பப்பாளியாக இருப்பது சால சிறந்தது.

கற்றாழை உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியை 7 முறை நீர் விட்டு கழுவி தண்ணீர் கலந்தோ அல்லது மோர் கலந்தோ அருந்துவதன் மூலம் மாதவிடாய் கோளாறை தவிர்க்கலாம்.
பீட்ரூட் போல கேரட்டும் உடம்பில் ரத்தம் அதிகரிக்க உதவும்.சிலருக்கு பீட்ரூட் சுவை பிடிப்பதில்லை அவர்கள் தினம் 5 கேரட்கள் உண்ணலாம்.அல்லது அவற்றை சாறாக எடுத்து அருந்துவதன் மூலம் ரத்தம் அதிகரிக்க செய்யும்.இது மாதவிடாய் வருவதற்கும்,வந்த பின்னர் ரத்தமில்லாமல் உடம்பு சோர்வடைவதை தவிர்க்கும.

உடல் சூட்டை குறைக்க அஞ்சரை பெட்டியில் இருக்கும் அதிசயமே வெந்தயம்.இதை தினம் காலை தண்ணீர் உடனோ அல்லது மோர் உடன் வெறும் வயிற்றில் தினம் எடுத்து கொள்வதன் மூலம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் சூடு மற்றும் வயிற்று வலியை தவிர்க்கலாம்.

பேரிட்சை பழம் தினம் காலை 2 அல்லது 3 சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து கிடைக்கும்.இது ரத்தம் ஊறவும் மாதவிடாய் காலங்களில் தெம்பு கொடுக்கவும் உதவும்.ஷ…ரு🌴🌷

என்றும் அன்புடன் ஆரோக்கியம்…

menstrual cycle uterine cycle
periods fertilization egg superficial uterine lining on menstruation periods

Regular menstrual cycle

Leave a Comment