நெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அதன் பயன்களும்

நெல்லியில் விட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, சி ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. இதில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன.

நெல்லியானது எலும்புகளில் முறிவினை உண்டாக்கும் ஆஸ்டியோகிளாட்ஸ் என்ற எலும்புறிஞ்சிகளின் செயல்பாட்டினை தடுத்து நிறுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நெல்லியில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது கீல்வாதத்தினால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தினைக் குறைக்கிறது. மேலும் இக்காயில் உள்ள விட்டமின் சி-யானது உடலானது கால்சியத்தை உறிஞ்சி உட்கிரகிக்க உதவுகிறது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட கால்சியம் எலும்பினை வலுவாக்குகிறது.

நெல்லிகாயில் உள்ள வைட்டமின் ஏ-வானது கண்பார்வையினை தெளிவுபடுத்துவதோடு வயோதிகத்தினால் ஏற்படும் கண்பார்வை இழப்பு நோயினையும் தடுக்கிறது.

நெல்லிகாயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ஆக்ஸிஜனேற்றத்தால் கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. நெல்லியை ஊறவைத்த தண்ணீரைக் கொண்டு கண்களைக் கழுவும்போது கண்பார்வை தெளிவடையும்.

நெல்லியை தொடர்ந்து உண்பதால் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்கும். இக்காயில் உள்ள இரும்புச்சத்தினால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து மூளையின் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் மூளையின் நலம் பாதுகாக்கப்படுகிறது.

நெல்லிகாயில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலினை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இக்காயில் உள்ள அதிகப்படியான விட்டமின் சி-யானது உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியினை வழங்ககிறது.

நெல்லியானது உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தடுத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் இதயநாளங்கள் அடைப்பிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

நெல்லியானது கேச வளர்ச்சி மற்றும் அதன் கருமைக்கான ஊக்குவிப்பு பொருளாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Tags: nealli nellikai Big Amla Aamla

Leave a Comment