கொரோனா வைரஸ் – நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள்

நோய்வாய்ப்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் அதற்கு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பதை நீங்கள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வது, புகை பிடிக்காமல் இருப்பது, குடிப்பதை குறைத்துக் கொள்வது போன்றவற்றை செய்வதால் ஒருவர் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் இருக்க முடியும். ஆனால் இதனுடன் நமது திட்ட உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

சமையலறையில் இருக்கும் மசாலா பொருள்கள் எல்லாமே சமையலுக்கு சுவை கூட்ட மட்டுமே பயன்படுத்துவதில்லை. இவை உடலுக்கு எதிர்ப்புசக்தி தரக் கூடியது. அப்படியான பொருள்களில் முதன்மையானது மஞ்சள், பூண்டு, இஞ்சி, பட்டை, அன்னாசிப்பூ, இலவங்கம், கொத்துமல்லி விதைகள், சீரகம், மிளகு போன்றவை எல்லாமே குழந்தைகளின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியவை. இந்த பொருள்கள் அதிகம் பயன்படுத்தும் உணவை பெரும்பாலும் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள்.

அதிலும் குழந்தைகளுக்கு பால் தரும் போது மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் சிட்டிகை கலந்து கொடுக்கலாம். சீரகம்,அன்னாசி சேர்த்த நீரை கொடுக்கலாம். பூண்டை பாலில் வேகவைத்து கொடுக்கலாம். கஷாயத்தில் இஞ்சி சேர்த்துகொடுக்கலாம். இவை எல்லாமே பாக்டீரியா எதிர்ப்பு குணங்களை கொண்டவை.

சிட்ரஸ் பழங்கள்

குழந்தைகளுக்கு பழங்கள் நன்மை செய்யும். ஆனால் பல பெற்றோர்கள் குளிர்காலத்தில் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் குளுமையை உண்டாக்கும் என்று தவிர்த்துவிடுவார்கள். ஆனால் இவை உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியவை.

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பழம் கொடுக்கும் போது
நெல்லிக்காய், கொய்யா, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, சிவப்பு நிற பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம். காய்கறிகளில் சிவப்பு குடைமிளகாய். தக்காளி, ப்ரக்கோலி அடர்ந்த நிற காய்கறிகள் சேர்க்கலாம். இவை எல்லாமே வைட்டமின் சி நிறைந்த ஆதாரத்தோடுஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்தவை. இது உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.

விதைகள்

தினசரி கொட்டைகளில் இரண்டையாவது கொடுக்க முயற்சியுங்கள். பாதாமை ஊறவைத்து தோலுரித்து கொடுங்கள். அக்ரூட் முந்திரி, பிஸ்தா போன்றவற்றை கொடுக்கலாம்.இது ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும்.

கொட்டைகள் போன்று விதைகளும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடும். விதைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பெறமுடியும். ஒரே விதமான விதைகளாக இல்லாமல் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்ற விதைகளை கலந்து கொடுக்கலாம். இதை சாலட் வகையில், சிற்றுண்டியின் போது அப்படியே கொடுக்கலாம்.

மஞ்சள்

இந்திய வீடுகளில் பொதுவாக இருக்கக்கூடிய ஒன்றான மஞ்சள் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் மருத்துவ குணங்களுக்காக மிகவும் மதிப்புடையதாக கருதப்படுகிறது. மஞ்சளில் அதிகளவு காணப்படும் குர்குமின் (curcumin) உள்ளடக்கம் அழற்ச்சி எதிர்ப்பு மூலப் பொருளாகும். மஞ்சளின் குணப்படுத்தும் பண்புகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றது.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை உண்பதோடு மறக்காமல் சீரான உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியத்துக்கு அதிக அளவு நீரை பருகுவதோடு தேவையான தூக்கமும் வேண்டும்.

தேன்

இயற்கையான தேனில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்கள் மிகுதியாக உள்ளது. இயற்கையான தேனில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன. தேனில் அதிகமாக உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொண்டையை இதமாக்கி, உடலை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் குடல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தேனில் உள்ள fructose மற்றும் glucose இணைந்து நீடித்த ஊக்கத்தை அளிப்பதால் இது ஆற்றல் அதிகரிக்கும் உணவாகும். செரிமான கோளாறுகளை சரிச்செய்யவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது.

Tags: Immunity, corona, boosting foods