பெண்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சைனைகள் என்று பல உள்ளது. அதில் முக்கியமான ஒன்று எண்டோமெட்ரியோஸிஸ். இதனை கருப்பை அகப்படலம் என்றும் அழைக்கலாம். எண்டோமெட்ரியோஸிஸ் என்பது கருப்பைக்கு உள்ளே இருக்கவேண்டிய எண்டோமெட்ரியம் அல்லது திசுக்கள் கருப்பைக்கு வெளியேயும் வளருவதாகும்.
இந்த திசுக்கள் பொதுவாக பெண்களின் இடுப்பு பகுதி, கருப்பை மற்றும் ஃபாலோப்பியன் குழாய்களில் வளரக்கூடியது. இந்த நிலை முற்றும்போது அது இனபெருக்க உறுப்பிலும் வளரக்கூடும். இதன் முக்கிய அறிகுறி இடுப்பு பகுதியில் ஏற்படும் அதிக வலியாகும். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் அதிக வலி ஏற்படும். இந்த எண்டோமெட்ரியோஸிஸ் வலியை குறைக்கும் இயற்கை வைத்தியங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
அறிகுறிகள்
இடுப்பு வலியை தவிர எண்டோமெட்ரியோஸிஸ் நோயின் மற்ற அறிகுறிகள் யாதெனில் உடலுறவில் ஈடுபடும்போது அதிக வலி ஏற்படுவது, குடல் இயக்கங்களில் மாறுபாடு, சிறுநீர் கழிக்கும்போது வலி, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு, வீக்கம், சோர்வு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
வெப்பம்
வலி அதிகமாக இருக்கும்போது அதற்கு வெப்பம் ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும். வெப்பம் உங்கள் இடுப்பு தசைகளை தளர்வாக மாற்றும், மேலும் தசைபிடிப்பு மற்றும் வலியை குறைக்கக்கூடியது. சூடான நீரில் குளிப்பது, சூடான தண்ணீர் பாட்டில்களை வலி மிகுந்த இடத்தில் உபயோகிப்பது போன்றவை தசைப்பிடிப்புகளின் மீது சிறப்பாக செய்லபடக்கூடும்.
OTC – எதிர் அழற்சி மருந்துகள்
Over The Counter என்னும் எதிர் அழற்சி மருந்துகள் எண்டோமெட்ரியோஸிஸ் மூலம் ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் இடுப்பு வலியிலிருந்து விரைவில் நிவாரணம் அளிக்கும். இந்த மருந்துகளில் இபுப்ரபின் மற்றும் நேப்ரக்ஸான் உள்ளது. இந்த மருந்துகளை உணவு உட்கொண்ட பின்னரே எடுத்துக்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் வயிற்றுக்கோளாறுகள் மற்றும் அல்சர் போன்றவை ஏற்படாமல் இருக்கும். அதேபோல் ஒரு வாரத்திற்கு மேலாக இதை பயன்படுத்த வேண்டாம்.
விளக்கெண்ணெய்
பல நூறு ஆண்டுகளாக விளக்கெண்ணெய் எண்டோமெட்ரியோஸிஸ்க்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தசைப்படிப்பு ஏற்பட்டதை உணர்ந்தவுடனேயே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இதனை மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னர்தான் பயன்படுத்த வேண்டும், மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடாது. இதை வைத்து நேரடியாக அடிவயிற்றில் மசாஜ் செய்யவேண்டும். இடுப்பு தசைகளுக்கு அதிக நிவாரணம் தேவையென்றால் அதில் சில துளிகள் லெவெண்டர் எண்ணெய் கலந்து கொள்ளலாம். சிறிது சூடுபடுத்தியபின் இதனை உபயோகிக்கவும்.
மஞ்சள் எண்டோமெட்ரியோஸிஸால் அவதிப்படுபவர்க்ளுக்கு மஞ்சள் ஒரு மிகச்சிறந்த நிவாரண பொருளாக பயன்படுகிறது. இது நாள்பட்ட எண்டோமெட்ரியோஸிஸ்க்கு கூட சிறந்த மருந்தாக செயல்படும். சில ஆய்வுகளின் படி மஞ்சள் எண்டோமெட்ரியோஸிஸ் வளர்ச்சியை தடுக்கக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. நீங்கள் மஞ்சள் மாத்திரைகளோ அல்லது மஞ்சள் தேநீரோ குடிக்கலாம். சுடுநீரில் மஞ்சளுடன் சிறிது இஞ்சித்தூளையும் சேர்த்து கொதிக்கவைத்து தேன்சேர்த்து குடிக்கவும். எண்டோமெட்ரியோஸிஸ் அறிகுறிகள் தெரிந்தால் தினமும் மூன்று முறை இதனை குடிக்கவும், இல்லையனில் ஒருமுறை குடித்தால் போதும்.
உணவுகள்
இது உடனடியான நிவாரணத்தை வழங்காது, ஆனால் இது எண்டோமெட்ரியோஸிஸ் ஏற்படும் நீண்ட கால வலியை சமாளிக்க உதவும். வீக்கத்தை உருவாக்க கூடிய உணவுகளை தவிர்ப்பதும், எதிர் அழற்சி பண்புகளை ஊக்குவிக்கும் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதும் எண்டோமெட்ரியோஸிஸை கட்டுப்படுத்த உதவும். தவிர்க்க வேண்டிய உணவுகள் பால், காஃபைன், ஆல்கஹால் போன்றவை. உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியவை பச்சை காய்கறிகள், ப்ரோக்கோலி, இஞ்சி, பெரிஸ் போன்றவை ஆகும்.
மசாஜ்
இடுப்பு தசைகளை நன்கு மசாஜ் செய்வது தசைப்பிடிப்புகளை சரி செய்யவும், வீக்கத்தை குறைக்கவும் உதவும். சில துளிகள் லெவெண்டர் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்வது நல்ல நிவாரணம் அளிக்கும். மென்மையாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்ட இடத்தை மசாஜ் செய்யவும். இதனை மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பே செய்ய வேண்டும், ஏனெனில் மாதவிடாய் காலத்தில் இதனை செய்வது எண்டோமெட்ரியோஸிஸ் அறிகுறிகளை தீவிரமாக்கும்.
இஞ்சி டீ
எண்டோமெட்ரியோஸிஸ் காரணமாக சில பெண்கள் குமட்டல் பிரச்சினையை அனுபவிக்கலாம். இஞ்சி டீ குமட்டலை சரிசெய்வதற்கான சிறந்த மருந்தாகும். ஆராய்ச்சி முடிவுகள் தொடர்ந்து இது பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது என கூறுகிறது. தண்ணீரை கொதிக்கவைத்து அதில் சில இஞ்சி துண்டுகளை நசுக்கி போடவும். சிறிது நேரம் கழித்து இதனை வடிகட்டி குடிக்கவும். இல்லையெனில் கடைகளில் இஞ்சி டீ தூள் கிடைக்கும். இதனை தினமும் இரண்டு முறை குடிக்கவும்.
uterus Endometriosis
How to cure endometriosis pelvic pain that only affects women