இந்த நவீன யுகத்தில் வாலிபர்கள் தாகமெடுத்தால் உடனே குளிர்பானம் வாங்கி குடிக்கும் பழக்கம் உள்ளது .அதில் இருக்கும் தீமைகள் பற்றி தெரிந்தால் அதை தொடவே அச்சப்படுவீர்கள் .நம் முன்னோர்கள் தாகமெடுத்தால் மோர், இளநீர் என்று குடிக்க சொன்னார்கள் .அவர்களும் அதை குடித்து ஆரோக்கியமாய் இருந்தார்கள்.
வெயில் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் பலரும் கார்பனேற்ற பாட்டில் குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள். ஆனால் கார்பனேற்ற பானங்களை அதிகம் குடிப்பது ஆபத்து என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
- குளிர்பானம் குடிப்பதால் வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும்.
- நம் பற்களை பதம் பார்க்கும் .வெகு சீக்கிரத்திலேயே பற்களின் எனாமலை அரித்து பற்கள் விழ காரணமாய் இருக்கின்றன .மேலும் அதிலிருக்கும் கெமிக்கல் நமக்கு எலும்பு சிதைவு நோயை உண்டு பண்ணுகிறது
- குளிர்பானங்களில் உள்ள கார்போனிக் ஆசிட் நாவில் ஏற்படும் சென்சேஷன் தொடர்ந்து அந்த பானங்களுக்கு அடிமையாக்கும்.
- கார்பனேற்ற பானங்களை அருந்துவது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
- கார்பனேற்ற பானங்களில் உள்ள சோடா நுகர்வு உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.
- குளிர்பானங்களில் உள்ள சர்க்கரையேற்ற பொருட்கள் டைப் 2 நீரிழிவு ரோஉ அபாயத்தை அதிகரிக்கிறது.
- டயட் குளிர்பானங்களும் ஒரு நாளைக்கு இரண்டு கப் மேல் குடிப்பது ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்
- குளிர்பானங்கள் அந்த சமயத்திற்கு தாகத்தை தணிப்பது போல தோன்றினாலும் தாகத்தை அதிகரிக்கிறது.
harmful effects of consuming cold drinks