கை கால் குடைச்சல் காரணம் என்ன?யாரை பாதிக்கும்.

மது உடலில் சில நேரம் எங்கு வலி இருக்கின்றது என்று   சரியாகச் சொல்லத் தெரியாது.ஏதோஒரு தொந்தரவு இருப்பதாக   நம்மால் உணரமுடியும்.     அதுபோலவே கை, கால் வலியும் அப்படித்தான்.எங்கு வலிக்கின்றது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.

ஏனென்றால் முழங்கை,கால்முட்டி தொடங்கி கீழ் நோக்கி வலியா,இல்லை பிடித்து இழுக்கிறத’’ என்ன வென்றே தெரியாது.ஆம்…ஒருவிதமான தொந்தரவு அசோகரியமாக உணர்வோம். அதுவே கை,கால் உலைச்சல் என்கிறோம்’. இந்த தொந்தரவு வயதானவர்கள் மட்டும் பாதிப்படைவது கிடையாது. ஒரே இடத்தில் பல மணிநேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் இப்பிரச்னை வரும். என்று, மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் கூறுகின்றானர்.

 கைகால் குடைச்சல் அறிகுறிகள் என்ன;

ஒருவருக்கு கை, கால்களில் குடைச்சல் வருவதற்கு பல காரணங்கள் இருக்க முடியும்.முதுகுத்தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் நழுவி நரம்பு மேலே அழுத்துவதால், கை, கால் குடைச்சல் ஏற்படக்கூடும். ரத்த நீரழிவுநோய் கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக இருத்தாலும்,கை, கால் உளைச்சல் இருக்ககூடும்.

நரம்பு பாதிப்படைந்து இருப்பது,  வைட்டமின் பி12, கால்சியம் சத்து குறைபாடு, தைராய்டு ஹார்மோன் குறைவாக இருத்தல் அதுவும் ஒரு காரணமாகும்.

இந்த பிரச்சனைகள் பெரும்பாலும் முப்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். என்றாலும், வேலையின் காரணமாக வரலாம்.உதாரணமாக சுமைதூக்கும் தொழிலாளிகள், விவசாய வேலை,தொடர்ச்சியாக நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்த நிலையில் பல மணி நேரம் வேலை,மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிகம் பாதிக்கிறது.

மேலும்’’மாதவிலக்கு, தாய்மை அடைதல், அதிக வேலைச்சுமை, ரத்தசோகை, தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஆகியவையும் காரணமாகும். இது பரம்பரைக்கும் வரும் என்று கூறமுடியாது. ஏனென்றால் இது தொற்று வியாதி இல்லை.

குடைச்சல் வரப்போவதை சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். காலின் அடிப்பாகத்தில் எரிச்சல் தோன்றும்… படிப்படியாக முழங்கால் வரை அதிகரிக்கும்.

இரவு நேரங்களில் தூங்கும்போது, கெண்டைக் காலில் இழுத்துப் பிடிக்கிற உணர்வுகள்,இருப்பது. குடைச்சல் ஏற்படுவதற்கு முன்னர் கை, கால்கள் மரத்து போதல் ஆகியவை  இதன் அறிகுறியாக இருக்கும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதங்களில் ஊசி குத்துவது, சுருக் என்ற வலி போன்ற உணர்வுகள் இருப்பதுண்டு.

இந்த அறிகுறி பெண்களுக்கு இருந்தால் இடுப்பு வலிமற்றும் தலைவலி வரும்.சிலருக்கு தூக்கமின்மை ஏற்படலாம்.

உற்கார்ந்து துணிதுவைக்க முடியாத நிலை,வீட்டு வேலைகளைச் சரியாக செய்ய இயலாத நிலைஏற்படும். சர்க்கரை நோய், தைராய்டு பிரச்னை ஆகியவற்றால் ஏற்படுகிற கண் நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு,முடி உதிர்தல் ஆகியவையும் சேர்ந்து கொண்டு மேலும் தீவிரமாக்கும்.

வலி நிவாரணி மருந்துகள், வைட்டமின் மாத்திரைகளை நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.மற்றும்  மருந்துகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாலும் கை, கால் குடைச்சலைக் குணப்படுத்த முடியும்.

மேலும் சில எளிய உடல் பயிற்சி,மற்றும்  நடைப்பயிற்சிகள் மூலமும் வலி வராமல் தடுக்க முடியும்.

எளிதில் செரிக்கக் கூடிய புழுங்கலரிசி உணவு, கஞ்சி, எண்ணெய் இல்லாத கோதுமை ரொட்டி, உளுந்து, வெந்தயம் சேர்ந்த உணவு வகைகள், ரசம் போன்றவற்றை கை, கால் குடைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளலாம். கிழங்கு வகைகள், காரம் அதிகமுள்ள உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பது அவசியம். உணவில் அதிக உப்பு சேர்த்து கொள்ளுவது உளைச்சலை அதிகப் படுத்தும்.ஆகவே குறைத்துக் கொள்ளுவது நல்லது.

மருத்துவரை பார்க்காமல் அவரின் ஆலோசனை இல்லாமல், சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அது ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

மருந்து கலந்த எண்ணெய், ஆயின்மென்ட், ஸ்பிரே ஆகியவற்றை உங்கள் மருத்துவர் பரிசோதித்த பின் அவரின் ஆலோசனை பெற்றப்பின் எடுத்து கொள்ளலாம். இதனால் தற்காலிக மாக வலியைக் குறைக்கலாம்.

தண்டுவட பாதிப்பினால் ஏற்படும் கை, கால் குடைச்சலுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே எடுத்து பார்ப்பது அவசியமாகும். நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி பிரச்னைக்கான காரணத்தை தெரிந்த பிறகு சிகிச்சை எடுக்க வேண்டும்.அப்போது தான் அதற்கான தீர்வை அடையமுடியும். மேலே பூசிக்கொள்ளும் களிம்புகளால் மட்டுமே குணப்படுத்த முடியாது.

சரியான காரணம் மருத்துவரால் மட்டுமே நாம் அரிய முடியும்.ஆகவே’’ சுயமாக மருந்துகள் எடுக்காமல் பரிசோதித்து முறையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.அப்போதுதான் முழுமையக  குணப்படுத்த முடியும்.

leg pain, hand and foot Kudaichal