நெல்லிக்காய் இதயத்தசைகளை வலுவாக்கி கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. இதனால் இதய நலத்தைக் காக்க நெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோயினை தடைசெய்கிறது.
உடல் வளர்சிதை மாற்றத்தின்போது ஏற்படும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டால் உடல் செல்கள் பாதிப்படைந்து புற்றுநோய் உருவாதை இக்காய் தடைசெய்கிறது. புற்றுநோய்க்கு உண்ணப்படும் மருந்துகளின் பக்கவிளைவை இக்காய் தடைசெய்கிறது.
நெல்லிக்காயில் உள்ள குறைந்தளவு இனிப்பு மற்றும் அதிகமான நார்ச்சத்து சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வினைத் தருகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கிறது. எனவே இக்காயினை சர்க்கரை நோயாளிகள் உண்டு இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைக்கலாம்.
நெல்லிக்காய் மலமிளக்கியாகவும், குளிர்ச்சியான பொருளாகவும் விளங்குவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு உள்ளிட்ட வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சரியான தீர்வாகும். மேலும் இக்காய் செரிமானத்திற்கு தேவையான நொதிகளைச் சுரக்கச் செய்து உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது.
நெல்லிக்காயில் உள்ள இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிஜென்டுகள், கரோடீனாய்டுகள் ஆகியவை கேசம் உதிர்வதைத் தடுப்பதோடு அதன் கருமை நிறத்தினையும் நிலைநிறுத்துகிறது. எனவே நெல்லியைப் பயன்படுத்தி கேசத்தின் நலத்தினைப் பாதுகாக்கலாம்.
நெல்லியானது அப்படியேவோ, பொடியாகவோ, சாறாகவோ பயன்படுத்தப்படுகிறது. இனிப்புகள், கேக்குகள், ஊறுகாய்கள், வற்றல்கள், சர்ப்பத்துகள் உள்ளிட்டவை தயார் செய்ய இக்காய் பயன்படுத்தப்படுகிறது.
சத்துக்கள் நிறைந்த இயற்கையின் கொடையான சிரஞ்சீவி வரம் தரும் நெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.
cancer
nealli nellikai Big Amla Aamla Gooseberry inhibits the growth of cancer cells