வாயு தொல்லை நீங்க

பால் சம்மந்தமான உணவுகள், முட்டை கோஸ், பட்டாணி, வெங்காயம், காலிஃபிளவர் போன்ற சில பொருட்களை அதிகம் உண்பதால் வாய்வு தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து, காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சக்கரையோடு சேர்த்து என வந்தால் வாயு தொல்லை நீங்கும்.

துளசி சாறு மற்றும் இஞ்சி சாறை தலா மூன்று ஸ்பூன் எடுத்துக்கொண்டு காலை மாலை என இரு வேலையும் மூன்று நாட்களுக்கு குடித்து வர வாய்வு மூன்று நீங்கும்.

சுக்குமல்லி காபியை குடிப்பது, பூண்டு குழம்பு வைத்து மதியம் உண்பது, முடக்கத்தான் கீரையை வதக்கி சாப்பிடுவது போன்ற சில எளிய முறைகளை கொண்டும் வாயு தொல்லையில் எளிய விடுபடலாம்.

சாப்பிடும் சமயத்தில் பேசாமல் சாப்பிடவேண்டும். நாம் பேசிக்கொண்டே சாப்பிடுவதால் நம்மை அறியாமல் உணவோடு சேர்ந்து தேவைக்கு அதிகமான காற்றும் வயிற்றுக்குள் செல்கின்றது. அந்த காற்று மீண்டும் வயிற்றுக்குள் அல்லது ஆசன வாய் வழியாகவோ வெளியேறுகிறது. தேவை இல்லாமல் காற்று வெளியேறுவதை தவிர்க்க நாம் தேவை இல்லமால் காற்றை உட்கொள்ளாமல் இருந்தாலே போதும்.

எண்ணெய் சம்மந்தமான உணவுகளை தவிர்த்து வேகவைத்த உணவுகளை உண்பது, இரவு உணவை தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக உண்பது, பால் சம்மந்தமான பொருட்கள், இறைச்சி உண்பது, குறைத்து, பச்சை காய் கறிகள் உண்பது, தினமும் நடை பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றின் மூலம் வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

அல்சர் எனப்படும் குடல் புண்:
இதுவும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணம். சரிவர மருத்துவம் செய்துகொள்ளாவிட்டால் வேறு பல சிக்கல்களை உண்டாக்கும்.

அதிகக் காரம், மசாலா, எண்ணையில் பொறித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். இரவு நேரம் கழித்து உண்பது வேண்டாம்.

அசிடிட்டிக்கென்று எடுத்துக் கொள்ளும் மருந்துகளை அடிக்கடி சாப்பிடவேண்டாம். முதலில் குணம் ஏற்படுவதுபோல தோன்றினாலும் நாளடைவில் வயிற்றைக் கெடுத்துவிடும். அதேபோலே வலி நிவாரணிகளும் வயிற்றுக்கு நல்லதல்ல.

வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல்/அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளி துண்டுகள், இளம்பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு எடுக்கலாம்.
மதிய உணவில் நிறைய காய்கறிகள், கீரை கூட்டு/கடைசல்,-இவற்றுடன் அரிசி உணவு அளவாய் சாப்பிடுதலும், இரவில் காலை உணவு போல் எளிய சத்தான உணவு எடுத்தலும் அவசியம்.

பப்பாளி : வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாய்வு தடுக்கப்படுகிறது.

வாழைப்பழம் : வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.

தினசரி உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம். சாப்பிட்டவுடன் சிறிது நடக்கலாம்.

Tags: gas problem