தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் இந்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
- காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும்.
- இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.
- வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
- முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
- கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும்.
- வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது
Empty stomach
Foods to be eaten on an empty stomach