அது இந்த நோயா இருக்கலாம்… ஜாக்கிரதை
ஒவ்வொருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான் நினைப்போம். சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் முதலில் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
எனவே நமது உடல் நலத்தில் அக்கறையுடன் இருப்பது மிகவும் முக்கியமான விஷயம். நம் உடலில் நடைபெறும் அனைத்து மாற்றங்களும் ஏதோ ஒரு காரணத்தால் தான் ஏற்படும்.
உடல் அறிகுறிகள்
உடலுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. இந்த மொழியை புரிந்து கொண்டால் நாம் ஆரோக்கியமாக அதை பேண முடியும். இப்படி உடல் நம்மிடம் கூறுவதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதிலும் இந்த 5 உடல் அறிகுறிகள் மிகவும் முக்கியமானவை. இதன் மூலம் உங்கள் உடலை பற்றி 100% நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். உதாரணமாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்படுவதற்கு முன் சில அறிகுறிகள் தென்படும். இந்த மாதிரி ஒன்னு நடப்பதற்கு முன் உடல் நமக்கு சில மொழி களை கூறுகிறது.
எண்டோ மெட்ரோஸிஸ்
இந்த மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரத்த போக்கு ஏற்படுவதற்கு முன்பு சில அறிகுறிகள் தென்படும்.கடுமையான வயிற்று வலி, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவர். இது எண்ட்ரோமெட்ரோஸிஸ் பிரச்சினையாக கூட இருக்கலாம். கருப்பை மற்றும் கருப்பை குழாய்களில் இருக்கும் திசு வெளிப்புறமாக வளர்ச்சி அடைவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இது உங்கள் மாதவிடாய் அறிகுறிகள் மாதிரி இருந்தாலும் சற்று கவனிக்கப்பட வேண்டியது. எனவே இது குறித்து உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள். ஹார்மோன் தெரபி அல்லது அறுவை சிகிச்சை போன்றவற்றை கொண்டு சரி செய்வார்கள்.
வலி, அரிப்புடன் வடுக்கள் நிறைந்த தோல்
அரிப்புடன் தோல் உரிதல், சரும வடுக்கள் ஏற்படுவது சோரியாஸிஸ் நோயின் அறிகுறியாகும். இதற்கு ஓடிசி சரும க்ரீம்கள் போன்றவை உதவியாக இருக்கும்.
கால்கள் புண்ணாகுதல்
நீங்கள் விளையாடும் போது கால்களில் அடிபட்டு அந்த புண் ஆறாமல் மேலும் மேலும் புண்ணாகிக் கொண்டே இருந்தால் உங்களுக்கு மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இந்த பற்றாக்குறை இருக்கும் போது கால்களில் ஏற்பட்ட புண் தீவிரமாகும். எனவே வாழைப்பழம், யோகார்ட் மற்றும் கீரைகள் போன்றவை உங்களுக்கு தேவையான பொட்டாசியத்தை கொடுக்கும்.
எழுந்திருக்கும் போதே கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலி
சில நேரங்களில் நாம் தூங்கி எழுந்திருக்கும் போதே கழுத்து மற்றும் தோள்பட்டை வலியால் அவதிப்படுவர். இது பொதுவாக சரியான நிலையில் படுத்து தூங்காததால் ஏற்படும். எனவே முடிந்த வரை தூங்கும் போது உங்கள் தோள்பட்டையை சுருக்காமல் நீட்டி படுங்கள். இதற்கு நீங்கள் முழங்காலுக்கு இடையில் தலையணை வைத்து உறங்குதல் அல்லது தலையணையை கட்டிக் கொண்டு உறங்குதல் போன்றவற்றை செய்யலாம்.
சிறுநீரின் நிறம்
சில நேரங்களில் நாம் கழிக்கும் சிறுநீரின் நிறம் கூட நமது உடலில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கும். வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது இயல்பானது, அதுவே மஞ்சள், அடர்ந்த ப்ரவுன், ஆரஞ்சு, சிவப்பு நிறம் போன்றவை கவனிக்கப்பட வேண்டியது. எனவே இந்த மாதிரியான அடர்ந்த நிறங்கள் தென்பட்டால் போதுமான நீர்ச்சத்து நம் உடலில் இல்லாததை குறிக்கிறது. அதுவே சிவப்பு நிறத்தில், வலியுடன் சிறுநீர் கழித்தால் அது சிறுநீர்ப் பாதை தொற்று அல்லது சிறுநீர்ப் பை புற்றுநோயாக கூட இருக்கலாம். எனவே உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
morning pain Morning Neck Pain
Does this place hurt when you wake up in the morning?