வாழைப்பூவை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், அவை இரத்தத்தில் கலந்துள்ள அதிக அளவு சர்க்கரைப் பொருளை கரைத்து வெளியேற்ற அதன் துவர்ப்பு தன்மை உதவுகிறது.
இவை இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
வாழைப் பூவை தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொண்டால் மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதலை தடுக்கும். உள்மூலம், வெளிமூலப் புண்களுக்கு சிறந்த மருந்தாகும். மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவர்றைக் குணப்படுத்தும்.
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.
துவரம் பருப்புடன் வாழைப்பூசேர்த்து கூட்டுவைத்து சாப்பிட வேண்டும். பித்த நோய்கள் குணமாகும்; இரத்தம் விருத்தியாகும். இருமல் நீங்க வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ ரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும். தாது விருத்திக்கு வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.
Banana flower vazhaipoo
Benefits of vazhaipoo