அவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

அதிக சத்துக்கள்:

அவகேடோ பழத்தில் அதிக அளவு நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. முக்கியமாக கொழுப்புகள்,, மாங்கனீசியம்,வைட்டமின் சி,வைட்டமின் பி ,வைட்டமின் கே, போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மருத்துவ ஆய்விலும் இந்த பழம் மனிதனின் ஆரோக்கியத்திற்கு நல்ல பலன் தரும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இனிமேல் இந்த பழத்தை கண்டிப்பாக வாங்கி அதன் பலனை பெறுங்கள்.

1. எடை அதிகரிப்பவர்களுக்காக – வெண்ணெய் பழத்தில் அதிக கலோரியும், கொழுப்பும் உள்ளதாக முன்னர் குறிப்பிட்டோம். எனவே, எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றாக இது உள்ளது. வெண்ணெய் பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் நல்ல அளவில் உள்ளன. 100 கிராம் வெண்ணெய் பழத்தில் 60-80 கலோரிகள் உள்ளன. எனவே, தங்களுடைய எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழமாக வெண்ணெய் பழம் உள்ளது.

2. இதயத்திற்கு ஏற்றது – இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க மிகவும் உதவியாக இருக்கும் பி 6 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை வெண்ணெய் பழத்தில் அதிகளவில் உள்ளன. எனவே, இதய நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக வெண்ணெய் பழம் உள்ளது. மிகவும் உயர்வான தனித்த நிலையில் செறிவூட்டப்பட்ட பழமாக இருப்பதால், இது மாரடைப்பைத் தடுக்கும் பழமாகவும் உள்ளது.

3. தோலுக்கு ஏற்றது – வெண்ணெய் பழ எண்ணெய் தோலின் அமைப்பையும், தரத்தையும் மேம்படுத்த உதவும் மிகச்சிறந்த எண்ணெய்களில் ஒன்றாக உள்ளது. இந்த எண்ணெயை காய்ந்திருக்கும் தோலில் போட்டு மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் தோலில் உள்ள வறண்ட பகுதிகள் பளபளப்பு பெறுவதோடு, மீண்டும் அழகுற காட்சியளிக்கும். எனவே தான், வெண்ணெய் பழ எண்ணெயை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்.

4. நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது – மிகவும் உயர்வான தனித்த நிலையில் செறிவூட்டப்பட்ட பழமாக இருப்பதால் வெண்ணெய் பழம் இரத்தத்தின் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இதன் கொழுப்புகள் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. எனவே தான், வெண்ணெய் பழம் குறைவான சர்க்கரை உள்ளவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.

5. வலி நிவாரணி – மூட்டு வலிக்கு முதன்மையான மருந்தாக வெண்ணெய் பழம் உள்ளது. இதிலுள்ள எரிச்சலை தடுக்கும் பொருட்கள், மூட்டுகள் இணையும் இடத்தல் வரும் வலியைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. வெண்ணெய் பழத்தில் உள்ள கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுக்களுக்கு வலியை நீக்கும் தன்மைகள் உள்ளன. நெடுங்காலமாக இருக்கும் உடல் வலிகளையும் கூட வெண்ணெய் பழ எண்ணெய் மசாஜ் மூலம் குணப்படுத்த முடியும்.

இவையெல்லாம் வெண்ணெய் பழத்தின் பலன்கள் பற்றிய சில தகவல்கள் மட்டுமே. மூப்படைவதை தள்ளிப் போடுவதற்கும், இளமையான தோற்றத்திற்கும் கூட வெண்ணெய் பழம் உதவுகிறது. புற்றுநோயை தவிர்க்கவும் மற்றும் நீரிழிவை கட்டுப்படுத்தவும் வெண்ணெய் பழம் உதவுகிறது. இதயம், தோல் மற்றும் தசைகள் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவும் சிறந்த நிவாரணியாக வெண்ணெய் பழம் கருதப்படுகிறது.

இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.  

மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும். 

இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

புற்றுநோய்ப் போன்ற கொடிய நோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும். அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே எலும்புகள் வலிமையடைகின்றன. 

கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த அவகோடா மிகவும் பயனுள்ள பழம். சிறுநீரக பிரச்னையால் அவதிப்படாமல் இருக்கவும், தெளிவான கண்பார்வைக்கும் அவகோடா பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வருவது அவசியமாகும்.

நார்ச்சத்து அதிகம்:

அவகேடோ பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்(avocado fruit benefits in tamil). மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பழத்தை எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.

கண் பிரச்சனைகள்:

இந்த வெண்ணை பழத்தில் அதிக அளவு லூடின் சத்து உள்ளது. எனவே இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நம்முடைய கண்களுக்கு நல்லது. கண்களில் ஏற்படும் கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு நாள்ல தீர்வு கிடைக்கும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்-ஐ க்ளிக் செய்யவும்.

avocado

Benefits of eating avocado fruit