கற்றாழையின் கை வைத்தியம்

வீட்டில் வளரும் கற்றாழையைக் கொண்டு கைவைத்தியம் செய்து, சிறு சிறு நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகளை பட்டியலிட்டுள்ளோம்.

காயங்கள்
கற்றாழையில் ஆன்டி-செப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் காயங்கள், புண்கள் மற்றும் பூச்சிக் கடிகள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்தலாம். அதற்கு இந்த செடியின் உட்புறத்தில் உள்ள ஜெல் போன்ற பகுதியை காயம் பட்ட இடத்தில் தடவ வேண்டும். இது எரிச்சலை குறைத்து புண்களை செரிசெய்யும்.

மலச்சிக்கல்
கற்றாழையில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை நீக்கி செரிமானத்திற்கு உதவும். அதிலுள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். மேலும் இது மலச்சிக்கல் ஏற்படும் போது, அதனால் உண்டாக்கும் எரிச்சலையும் நீக்கும்.

முகப்பருக்கள்
கற்றாழையை பருக்களை நீக்க பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழையை கொண்டு பருக்களை முழுமையாக நீக்க முடியாது. அழற்சியையும், சருமம் சிவந்திருப்பதையும் தடுக்கலாம். மேலும் பருக்கள் உடைவதையும் தடுக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அது சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமாக வைத்து அதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செயல்பாடுகள் மூலம் சருமத்தை இளமையாக மாற்ற உதவுகிறது.

சரும திசுக்களை
கற்றாழை குளிர்ச்சி ஏற்படுத்தும் செடியாக விளங்குவதால், எரிச்சல்கள் மற்றும் வெந்த புண்களுக்கு அதனை பயன்படுத்தலாம். இது சரும திசுக்களை வேகமாக சரிசெய்து அணுக்களை புதுப்பிக்க உதவும். அதனால் பாதிப்படைந்த திசுக்கள் மீண்டும் சீரமைக்கப்படும்

Tags: aloe-vera, aloe vera, katralai