சளித்தொல்லை நீங்க

மழைக்காலம் என்றாலே சளித்தொல்லை , தொண்டை எரிச்சல் , இரும்மல் என்று பல தொல்லைகள் வரும். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம்.

உப்புநீரில் வாயைக் கொப்பளித்தல்

தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும்.

இஞ்சி

இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பால் மற்றும் மஞ்சள்
சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது மஞ்சள் பால்.

மார்புச் சளி
ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒருத் தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிடவும்.

எளிய வீட்டு மருந்து
சளி, இருமலைப் போக்கும் இனிப்பான மிட்டாய்களை கடைகளில் வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள். இவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்துவிட முடியும்.
ஒரு சிறிய துண்டு இஞ்சியைச் சாறாகப் பிழிந்துகொள்ளவும். சிறிதளவு கருமிளகை வறுத்து, பொடியாக்கிக்கொள்ளவும். இஞ்சிச் சாறு, கருமிளகுப்பொடி இவற்றுடன் கொஞ்சம் மஞ்சள், தேன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் மாதிரி தயாரித்துக்கொள்ளவும். இதை பந்து மாதிரி உருட்டி வைத்துக்கொள்ளலாம். 10 முதல் 15 நிமிடங்களுக்கு இதை வாயிலேயே வைத்திருந்து பின் விழுங்கிவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதைச் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். எனவே, சளி வந்தால் வெந்நீர் அருந்தவேண்டியது கட்டாயம். அதோடு மேலே சொன்ன வழிமுறைகளில் ஒன்றையும் பின்பற்றினால் சளியும் இருமலும் வந்த இடம் தெரியாமல் ஓடிப்போவது உறுதி.

தொண்டை எரிச்சல்

  1. எலுமிச்சம்பழச்சாறுடன் தேனுனம் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும்.
  2. துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவில் கலக்கி குடித்தால் சளி குறையும்.
  3. பசும் பாலில் சிறதளவு ஓம்ம போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளி நீங்கும்.

இருமல்

ஒரு கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் வெள்ளை பூண்டு இவற்றை எடுத்து இன்றாக கொதிக்க வைத்து
பின்பு அதுமாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்த பின்பு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு ஒரு தேக்கரண்டி சாபிட்டு வந்தால் சளி , இருமல், ஆகிய நீங்கும்.

சளித் தொல்லை
ஆடாதோட இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி தட்டில் வைத்து அவித்து, அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும்.

இந்த சாரு 2 தேக்கரண்டி சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை நிங்கும்.

தலை குளிர்ச்சி
காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும். 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும். மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
பின்பு அதை வடிகட்டவும். 3 நாட்களுக்கு பிறகு இதை தலையில் தடவி வந்தால் தலை குளிர்ச்சி பெறும்.

Tags: dry cough cold throat pain varattu irumal  chest cold

Leave a Comment