மருதாணி இலை பயன்கள்

மருதாணி இலைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேமல் , படை மீது இரவில் தடவி காலையில் குளித்து வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

மருதாணி இலைச் சாறு (2 லிட்டர்), நல்லெண்ணெய் (2லிட்டர்) , பசும்பால் (2லிட்டர்) , மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.

மருதாணி இலையை தயிர் சேர்த்து அரைத்து ,இரவு படுப்பதற்கு முன் காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவிகொண்டு வந்தால் விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

மருதாணிப் பூக்களைப் பறித்து ,தலையணையின் கீழ் வைத்து படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்

மருதாணிச் செடியின் பட்டைகளை ஊறவைத்த தண்ணீரில் தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகும்.

மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துவந்தால் முடி கறுப்பாக மாறும்.

Tags: Maruthani Henna

Henna Leaf Uses

Leave a Comment