அக்கி

அக்கி நோயை ஆங்கிலத்தில் (Shingles) என்றும் (Herpes zoster) என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தருகிற, தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். இது Varicella zoster எனும் வைரஸால் உண்டாகிறது. சின்ன அம்மை (Chicken pox) உருவாக்கும் வைரஸ் கிருமியும் இதுதான். சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ், செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும். மேலும், சில நிலைகளில் இது ஏன் உருவாகிறது … Read more

வைரஸ்

நமது உடலின் மென்மையான பகுதிகளே பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பூஞ்சை, பாக்டீரியா, காளான் போன்ற பலவகையான நுண்கிருமிகளுக்கு அதற்கென சிறப்பாக வழங்கப்படும் நுண்கிருமி நாசினி பலனளித்தாலும், வைரஸ் கிருமியினால் ஏற்படும் தாக்குதலுக்கு மட்டும் சிறப்பான நுண்கிருமி நாசினிகள் இல்லை. ஏனெனில் வீரியமற்ற நிலையில் காணப்படும் வைரஸ் கிருமிகள் உயிருள்ள செல்களின் உள்ளே நுழைந்ததும், மிகவும் வீரியமடைந்து தன் தோற்றத்தையும் தாக்குதலையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆகையால்தான் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் அல்லது தடுக்கும் மருந்துகள் சிறப்பாக … Read more

ஒற்றைத் தலைவலி

அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது. இருப்பினும் குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் தலைவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல் மற்றும் வயிறு பிரச்சினைகளை ஒற்றைத் தலைவலி வரும் ஒருவர் சந்திக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். முட்டைக்கோஸ் இலைகளை … Read more