இயற்கை முறையில் உடல் உஷ்ணத்தை குறைக்க சில வழிகள்

கோடை கால வெயில் காரணமாக பலரும் உடல் உஷ்ணத்தால் பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது போன்ற நபர்கள் இயற்கையான முறையில் தங்கள் உடல் உஷ்ணத்தை குறைத்துக் கொள்ள சில டிப்ஸ் இதோ..! தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும். நல்லெண்ணெய் இல்லாவிட்டாலும், தினமும் தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்து குளிப்பது நல்லது. இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும். … Read more

நினைவாற்றலை அதிகரிக்கும் சில இயற்கை மருத்துவம்

நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.  நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட மறதி குறைந்து நினைவாற்றல்  வளரும்.  இலந்தைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொண்டு அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்படைந்து  நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.  கருஞ்சீரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் … Read more

தினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களாயிருந்தால் கட்டாயம் இதை படியுங்கள்

வயதானபோது ஏற்படும்போது கண்புரை நோய் மற்றும் கண் தசை அழற்சி நோய் உண்டாகிறது. முட்டையானது விட்டமின் ஏ,லடீன், ஸீஸாக்தைன் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.  முட்டையில் உள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது  கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.  முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது. முட்டையில் … Read more

அக்கி

அக்கி நோயை ஆங்கிலத்தில் (Shingles) என்றும் (Herpes zoster) என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தருகிற, தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். இது Varicella zoster எனும் வைரஸால் உண்டாகிறது. சின்ன அம்மை (Chicken pox) உருவாக்கும் வைரஸ் கிருமியும் இதுதான். சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ், செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும். மேலும், சில நிலைகளில் இது ஏன் உருவாகிறது … Read more

வைரஸ்

நமது உடலின் மென்மையான பகுதிகளே பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பூஞ்சை, பாக்டீரியா, காளான் போன்ற பலவகையான நுண்கிருமிகளுக்கு அதற்கென சிறப்பாக வழங்கப்படும் நுண்கிருமி நாசினி பலனளித்தாலும், வைரஸ் கிருமியினால் ஏற்படும் தாக்குதலுக்கு மட்டும் சிறப்பான நுண்கிருமி நாசினிகள் இல்லை. ஏனெனில் வீரியமற்ற நிலையில் காணப்படும் வைரஸ் கிருமிகள் உயிருள்ள செல்களின் உள்ளே நுழைந்ததும், மிகவும் வீரியமடைந்து தன் தோற்றத்தையும் தாக்குதலையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆகையால்தான் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் அல்லது தடுக்கும் மருந்துகள் சிறப்பாக … Read more

ஒற்றைத் தலைவலி

அதிகமான மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் தலைவலி ஏற்படுகிறது. இருப்பினும் குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் தலைவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல் மற்றும் வயிறு பிரச்சினைகளை ஒற்றைத் தலைவலி வரும் ஒருவர் சந்திக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். முட்டைக்கோஸ் இலைகளை … Read more