காது வலி போக்கும் வீட்டு வைத்தியம்

குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், அதனுடன் காது வலி போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காது வலி தானாகவே குணமாகும். ஆனால், வலி அதிகரித்தால் அல்லது தொடர்ந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

பொதுவாக மருத்துவர்கள் காதுகளை அதிகமாக குடையக்கூடாது என்று கூறுகிறார்கள். எந்த ஒரு சாதனங்களையும் காதுகளை சுத்தம் செய்ய பயன்படுத்தக் கூடாது. காதுகளில் உள்ள அழுக்குகள் தானாகவே சுத்தமாகும் தன்மை கொண்டவை. மேலும் குளிர் காலம் மற்றும் மழைக் காலங்களில் வெளியே செல்லும் போது காதுகளில் அதிக காற்றுப்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காது வலிகளை சரி செய்யக்கூடிய வீட்டு வைத்திய முறைகளை பற்றி பார்க்கலாம்.

நீராவி பிடித்தல்

சளி, காய்ச்சலுக்கு நீராவி பிடிப்பது போல தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, கெட்டியான போர்வையால் மூடி ஆவி பிடிக்க வேண்டும். மூக்கு வழியாக அந்த நீராவியை உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் செய்யவும். இது காதில் அழுத்த குறைவை ஏற்படுத்தி காது வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும்.

இஞ்சிச்சாறு

இஞ்சி சாறு காது வலியை குணப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள அலட்சிய எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்பினை சரி செய்ய உதவுகிறது. இஞ்சி சாற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சி சாற்றை சூடு செய்து ஆற வைத்த பின்னர் இளஞ்சூட்டுடன் காதை சுற்றியுள்ள பகுதிகளில் தடவ வேண்டும். இது ஓரளவுக்கு காது வலியை குணப்படுத்த உதவுகிறது. காதுகளில் உட்புறத்தில் இதனை பயன்படுத்த கூடாது.

பூண்டுச்சாறு

2 பூண்டு பற்களை பொடியாக நறுக்கி பூண்டை கடுகு எண்ணெயில் சூடாக்கி, ஆறிய பின் வடிகட்டவும். சாற்றை சூடு செய்து ஆற வைத்த பின்னர் இளஞ்சூட்டுடன் காதை சுற்றியுள்ள பகுதிகளில் தடவ வேண்டும்.

keywords: காது வலி, ear , ear pain